வைகை ஆற்றில் தண்ணீர் திறப்பு...
வைகை ஆற்றில் தண்ணீர் திறப்பு...!! 15.09.2024 முதல் 120 நாட்களுக்கு வைகை ஆற்றில் 8461 மி.க.அடி தண்ணீரை திறந்து விட தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. பெரியாறு பாசன பகுதிகளில் உள்ள 85563 ஏக்கர் மற்றும் திருமங்கலம் பிரதான கால்வாயின் கீழுள்ள 19439 ஏக்கர் ஆக திண்டுக்கல், மதுரை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் உள்ள 1,05,002 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் வைகை அணையில் இருந்து 1130 கன அடி வீதம் 45 நாட்களுக்கும் முழுமையாகவும், 75 நாட்களுக்கு வைத்தும் திறக்கப்படுகிறது. எனவே மதுரையை சுற்றி உள்ள மக்களுக்கு மிக மகிழ்ச்சி தான்... தினசரி UPDATE-களுக்கு "தினப்பிறை" WHATSAPP சேனலில் இணைய https://whatsapp.com/channel/0029Vaokuu82UPBLDAmtmy3g